தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பாகிஸ்தான் காவலர்களுக்கு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு - முசாராபாபாத்

முசாராபாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் காவலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

POK Journalist

By

Published : Oct 23, 2019, 11:43 PM IST

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முசாராபாபாத் நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள பத்திரிகையாளர் சங்கத்தில் இன்று பாகிஸ்தான் காவலர்கள் அத்துமீறி நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக நேற்று ஜம்மு காஷ்மீர் மக்கள் தேசிய கூட்டணி சார்பாக, பாகிஸ்தான் உயர் ஆணையம் முன்பு போராட்டம் நடந்தது.

அப்போது அவர்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். 1947ஆம் ஆண்டு முதல் தாங்கள் போராடி வருவதாகவும் தங்களுக்கு பாகிஸ்தானுடன் தொடர விருப்பம் இல்லை என்றும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களைக் காவலர்கள் தடியடி நடத்திகலைத்தனர். மேலும் கண்ணீர்ப் புகை குண்டுகளும் வீசப்பட்டன. இதற்கு இரண்டு பேர் பலியாகினர்.

பத்திாிகையாளர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று காவலர்கள் பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பலூசிஸ்தானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிப்பது போல், முசாராபாபாத் பகுதியிலிருந்து பாகிஸ்தான் படைகள் வெளியேற வேண்டும் என குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எல்லைக்குள் ஊடுருவ பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காத்திருப்பு: தயார் நிலையில் ராணுவம்

ABOUT THE AUTHOR

...view details