தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

#EEF 'ஸாகிரை நாடு கடத்துங்கள்' - மலேசியப் பிரதமரிடம் மோடி வேண்டுகோள்! - ஸாக்கிர் நாயக் நாடுகடத்த பிரதமர் மோடி வேண்டுகோள்

மாஸ்கோ: இந்தியாவிலிருந்து தப்பியோடி மலேசியாவில் தஞ்சம் புகுந்துள்ள இஸ்லாமிய மதபோதகர் ஸாகிர் நாயக்கை நாடுகடத்த அந்நாட்டு பிரதமர் மஹதிர் முகமதிடம், பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

modi

By

Published : Sep 5, 2019, 4:03 PM IST

மும்பையைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய மதபோதகர் ஸாகிர் நாயக். இவரது பேச்சுக்கள் சர்ச்சைக்குரியதாக வன்முறை, பயங்கரவாதம், மத வெறியைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மதபோதகர் ஸாகிர் நாயக்

இந்நிலையில், 2016ஆம் தேதி வங்க தேசத் தலைநகர் தாக்காவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் இவரது பெயர் அடிபட்டதால், ஸாகிர் நாயக் மீது தேசிய புலனாய்வு முகமையும் வழக்குப் பதிந்தது.

இதனையடுத்து, இந்தியாவிலிருந்து தப்பிய ஸாகிர், மலேசியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இதனால், இந்தியாவில் அதிகம் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் ஸாகிர் நாயக்கின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவில் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெறும் கிழக்கு பிராந்திய பொருளாதார மாநாட்டில் பங்கேற்று வரும் பிரமதர் மோடி, மலேசியப் பிரதமரை இன்று சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ஸாகிர் நாயக்கை நாடு கடத்துவது தொடர்பான பிரச்னையை பிரதமர் மோடி எழுப்பினார். இதற்கு நேர்மறையாக மலேசிய பிரதமர் பதிலளித்ததாகவும், இதுதொடர்பான இருநாட்டு அரசு அலுவலர்கள் தொடர்பில் இருப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

1991இல் ஸாகிர் தொடங்கிய இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளை (Islamic Research Foundation) மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவுசெய்து, அதன் சொத்துக்களை முடக்கியுள்ளது. இதுதவிர, உபா சட்டத்தின் கீழ் இந்த அறக்கட்டளைக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details