உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரசுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் பல நாடுகளில் மக்கள் உயிரிழக்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறிவரும் நிலையில், மனிதர்களைத் தாக்கும் கொரோனா செல்லப்பிராணிகளுக்கும் பரவும் என்பது ஹாங்காங் பொமெரேனியன் நாய் மூலம் உறுதியாகியுள்ளது.
உரிமையாளர்களிடமிருந்து நாய்க்கு கொரோனா பரவிருக்க வாய்ப்பு உள்ளது என்ற சந்தேகத்தில் அடிப்படையில் பொமெரேனியன் நாயொன்றை நீண்ட நாள்களாக ஹாங்காங் அரசு கண்காணித்துவந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை வரை நாய்க்கு கொரோனா தொற்று இல்லாத நிலையில், நேற்று பரிசோதித்ததில் அது இருப்பது உறுதியானது. மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் இது அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இது குறித்து உலக அமைப்பின் விலங்கு ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், "கொரோனா பாதிப்படைந்துள்ள நாய்க்கு குறைந்த அளவு மட்டுமே தொற்று உள்ளது.