பாகிஸ்தானின் பெஷாவரின் திர் காலனியில் நடைபெற்ற கூட்டத்தில், குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில், எட்டு பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று கைபர் பக்துன்க்வா காவல்துறை தலைவர் சனவுல்லா அப்பாஸி தெரிவித்தார்.
பாகிஸ்தானில் பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டும் - பஸ்லூர் ரஹ்மான் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
இஸ்லாமாபாத்: பெஷாவரில் நடந்த பள்ளிவாசல் குண்டுவெடிப்பு சம்பவம், பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசில் பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டும் என்ற கூற்றை அம்பலப்படுத்தியுள்ளது என்று ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் அமைப்பின் தலைவர் பஸ்லூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் அமைப்பின் தலைவர் பஸ்லூர் ரஹ்மான், “சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் (பி.டி.எம்) பேரணிகளில் மக்கள் 'தேர்ந்தெடுக்கப்பட்ட' அரசாங்கம் (இம்ரான் தலைமையிலான அரசு) சோர்வடைந்துள்ளது என்பதை நிரூபித்துள்ளது. நாட்டின் பொருளாதார நிலைமைகள் மிகவும் மோசமாக உள்ளது. மக்கள் பசியால் இறந்து கொண்டிருக்கிறார்கள். தேசிய பொறுப்புக்கூறல் பணியகம் (என்ஏபி) "இம்ரான் தலைமையிலான அரசாங்கத்தின் பி-குழு" எனக் கூறினார்.
மேலும், ஊடகங்கள் மீது பிரதமர் இம்ரான் கான் விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து, ஊடகவியலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கின்றன எனத் தெரிவித்தார்.