பிரிஸ்பேன்:ஆஸ்திரேலியாவின் பிரேஸர் தீவில் கொளுந்து விட்டெரியும் காட்டுத் தீயை அணைக்கும் முறையில் குயின்ஸ்லாந்து மாநில நிர்வாகம் ஈடுபட்டுவருகிறது. இந்தக் காட்டுத் தீயால் பொதுமக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுலாவாசிகளின் சொர்க்கப்புரியாக பிரேஸர் தீவு விளங்குகிறது. இங்குள்ள அழகிய இடங்களை, இன்ப பள்ளத்தாக்குகள் என்றும் கூறுவார்கள். இந்தப் பகுதியில் ஒரு இடத்தில் பற்றிய காட்டுத் தீ தற்போது கொளுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது.
இதனால், குடியிருப்புவாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான இடத்துக்கு நகரும்படி குயின்ஸ்லாந்து மாநில நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இங்குள்ள பள்ளத்தாக்குகளில் கடந்த வாரம் மனிதத் தவறு காரணமாக தீப்பற்றியுள்ளது. தற்போது இந்தத் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.