இந்தியாவின் வடகிழக்கு எல்லைப் பகுதியில் உள்ள நேபாள் நாட்டில் கரோனா பாதிப்பின் விவரம் குறித்து அந்நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஒலி இன்று பேசினார். அதில், அந்நாட்டு அரசு கரோனா பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த அனைத்து முயற்சியும் எடுத்துவருவதாகவும், உயிரிழப்பு மற்ற தெற்காசிய நாடுகளைக் காட்டிலும் நேபாளில் மிகக்குறைவு எனத் தெரிவித்தார்.
அதேவேளை, இந்தியாவில் இருந்து வருபவர்களால் நேபாளில் கரோனா பாதிப்பு அதிகரித்துவருவதாக புகார் தெரிவித்த அவர், இந்தியர்கள் முறையான பரிசோதனைகள் மேற்கொள்ளாமல் நேபாளுக்குள் நுழைகின்றனர் என்றார்.