தெற்கு ஆசியாவில் கரோனா வைரஸ் ஆதிக்கம் காணப்படும் நாடுகளில் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானும் ஒன்று. இங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 31 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதுவரை 4 ஆயிரத்து 762 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் சுகாதாரத் துறை அமைச்சருக்கும் கரோனா பாதிப்பு! - COVID-19 positive cases in Pakistan
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வெளியுறவுத் துறை அமைச்சரைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை அமைச்சரான ஜாபர் மிர்சாவுக்கும் கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பொதுமக்கள் மட்டுமின்றி அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் கரோனாவால் பாதிப்புக்குள்ளாகிவருகின்றனர். சமீபத்தில், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷிக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவருக்குக் கடந்த வாரம் கரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சரான ஜாபர் மிர்சாவுக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜாபர் மிர்சா தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்குக் கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது, மருத்துவ ஆலோசனையின் கீழ், எனது வீட்டில் சுயத்தனிமைப்படுத்துதலில் இருக்கிறேன். கரோனா அறிகுறிகள் லேசாக தென்படுகின்றன. எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: இந்தியாவில் ஒரு கோடியை தாண்டிய கரோனா பரிசோதனை - ஐ.சி.எம்.ஆர்