தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பாகிஸ்தானில் செய்தியாளர் சுட்டுக்கொலை - செய்தி வாசிப்பாளர்

கராச்சி: பாகிஸ்தானில் செய்தி வாசிப்பாளர் முரீத் அப்பாஸ் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pakistani news anchor shot dead in karachi

By

Published : Jul 10, 2019, 8:32 AM IST

பாகிஸ்தானில் 'போல்' என்ற பிரபல செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் முரீத் அப்பாஸ். இவர் செவ்வாய்கிழமை(நேற்று) இரவு துப்பாக்கியால் சுடப்பட்டதில் படுகாயம் அடைந்துள்ளார். பின்னர், சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

கராச்சியில் உள்ள கயாபன்-இ-புகாரி என்ற பகுதியில் நடந்த இச்சம்பவத்தில், அவரது நண்பரும் செய்தி வாசிப்பாளருமான கிசார் ஹயாத் என்பவரும் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக எழுந்த பிரச்னையில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details