ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பிரான்ஸ் நாட்டிற்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம்! - பிரான்ஸ் நாட்டிற்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம்

இஸ்லாமாபாத்: பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு செய்தி நிறுவனம் முகமது நபி குறித்து கேலிச் சித்திரங்கள் வெளியிட்ட நிலையில், இதனைக் கண்டிக்கும் விதமாக பாகிஸ்தானில் போராட்டம் நடைபெற்றது.

Protest
Protest
author img

By

Published : Oct 27, 2020, 8:55 PM IST

பிரான்ஸ் நாட்டில் செய்தி நிறுவனம் ஒன்று முகமது நபி குறித்து கேலிச் சித்திரம் வெளியிட்டது. இந்த கேலிச் சித்திரங்களை வகுப்பறையில் காட்டிய ஆசிரியரை 18 வயது இளைஞர் ஒருவர் தலையை வெட்டி கொடூரமாக கொலைசெய்தார்.

இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், முகமது நபி குறித்த கேலிச் சித்திரங்களை வெளியிட்ட செய்தி நிறுவனத்திற்கு எதிராக பிரான்ஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி பல இஸ்லாமிய நாடுகள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தன.

இந்நிலையில், பிரான்ஸ் அரசுக்கு எதிராகவும் அந்நாட்டு அதிபருக்கு எதிராகவும் பாகிஸ்தான் நாட்டில் கடும் போராட்டங்கள் நடைபெற்றன. பேரணிகளில் கலந்துகொண்ட மாணவர்கள் பிரான்ஸ் நாட்டின் தேசியக்கொடியை எரித்து தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

பிரான்ஸ் நாட்டுடனான உறவை முறிக்கும்படியும் அவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details