தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தொடர் அச்சுறுத்தல்; இந்தியத் தூதர்களை பின்தொடரும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ! - இந்திய தூதர்கள் அச்சுறுத்தல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அந்நாட்டு உளவுத்துறையான ஐஎஸ்ஐ சேர்ந்த நபர் ஒருவர், இந்தியத் துணைத் தூதரை அச்சுறுத்தும் நோக்கில் பின் தொடர்ந்துள்ளார்.

Breaking News

By

Published : Jun 5, 2020, 4:35 PM IST

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில், இந்தியத் துணைத் தூதரான கவ்ரவ் அலுவாலியாவை அச்சுறுத்தும் நோக்கில், அந்நாட்டு உளவுப்பிரிவான ஐஎஸ்ஐ சேர்ந்த நபர் ஒருவர், அவர் வீட்டின் அருகில் கார், இருசக்கர வாகனங்களில் சென்ற பலபேரை பின்தொடர்ந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து கவ்ரவ் அலுவாலியா சென்ற காரையும்; அந்த நபர் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்துள்ளார்.

முன்னதாக இதுபோன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன. அவைகளைக் குறிப்பிட்டு கடந்த மார்ச் மாதத்தில், இந்திய உயர் ஆணையம் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு எதிர்ப்புக் கடிதத்தை அனுப்பியது.

தொடர் அச்சுறுத்தல்; இந்தியத் தூதர்களை பாகிஸ்தான் ஐஎஸ்ஐ பின்தொடர்தல்

அதில், 'கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியத் தூதர்களை பின்தொடரும் 13 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இனிமேல், இதுபோன்று பின்தொடரும் செயல்களில் இருந்து ஐஎஸ்ஐ உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள் பின்வாங்க உத்தரவிடக் கோரி வலிறுத்துகிறோம்.

மேலும் இந்திய உயர் ஆணைய அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்ப நபர்களை பாதுகாப்பது பாகிஸ்தான் அரசின் பொறுப்பாகும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த மார்ச் 8ஆம் தேதி இந்திய உயர் ஆணைய மூத்த அலுவலரின் காரையும்; அதே நாளில் கடற்படை ஆலோசகரும் அச்சுறுத்தும்படியாக பின் தொடரப்பட்டிருக்கின்றனர். மார்ச் 9ஆம் தேதி துணை உயர் ஆணையரையும், ஐஎஸ்ஐ நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:முன்பு 'சமோசா'... இப்போ 'குஜராத் கிச்சடி' கலக்கும் ஆஸ்திரேலியப் பிரதமர்!

ABOUT THE AUTHOR

...view details