இது குறித்து பாகிஸ்தானின் நிதி, வருவாய், பொருளாதாரப் பிரச்னைகளுக்கான ஆலோசகர் ஹசிப் கூறுகையில், ஐஎம்எஃப் உடனான பலமாத பேச்சுவார்த்தைக்கு பிறகு 6 பில்லியின் டாலரை ( இந்திய மதிப்பில் ரூ.4200 கோடி) பாகிஸ்தான் கடனாக பெறவுள்ளது. இந்த தொகையானது மூன்று ஆண்டுகளில் பல்வேறு தவணைகளாக பாகிஸ்தானுக்கு கிடைக்கப் பெற உள்ளது" என்றார்.
பாகிஸ்தான் நாட்டுக்கு ரூ.4200 கோடி கடன் கொடுக்கும் ஐஎம்எஃப்! - pakistan loan
இஸ்லாமாபாத்: ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பாகிஸ்தான் ரூ. 4200 கோடி கடன் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

IMF
மேலும், இது குறித்து பேசிய பாகிஸ்தான் ஐஎம்எஃப் திட்டத் தலைவர் அர்நெஸ்டோ ராமிரெஸ் ரிகோ ( Ernesto Ramirez Rigo), உறுப்பு நாடுகளைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க ஐஎம்எஃப் கடன் அளித்து வருகிறது. தற்போது, பாகிஸ்தான் நலிவடைந்துள்ள நிலையில், இந்த கடனானது அந்நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்" என்றார்.
இது தவிர, ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி உள்ளிட்ட வங்கிகளிடம் இருந்து ஆயிரம் முதல் இரண்டாயிரம் கோடி வரை பாகிஸ்தான் கடன் வாங்கவுள்ளது.