பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஒமாரா நகரிலிருந்து, கவாதருக்கு நான்குப் பேருந்துகள் சென்று கொண்டிருந்தன. அப்போது, ராணுவ சீருடையில் துப்பாக்கி ஏந்தி வந்த கும்பல் கடற்கரை நெடுஞ்சாலையில் ஒரு பேருந்திலிருந்து 14 பேரைக் கீழேத் தள்ளி சரமாரியாகச் சுட்டது.
ஈரான் எல்லைப் பகுதியில் வேலி அமைக்கப்படும்! பாகிஸ்தான் - border
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 14 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஈரான் எல்லையில் வேலி அமைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்
இச்சம்பவம் தொடர்பாக, பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் எல்லைப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டது. அதன்படி, ஈரான் எல்லைப் பகுதியில் வேலி அமைக்கப்படும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி தற்போது தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக நாளை ஈரான் செல்லும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இது தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என்றும் குரேஷி கூறியிருக்கிறார்.