பாகிஸ்தான் அரசு விமானப் போக்குவரத்து நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஆப்கானிஸ்தான் நாட்டிற்கான சேவையை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் ஒரே பயணிகள் விமானப் போக்குவரத்து நிறுவனம், பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனமே ஆகும்.
இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "காபூலுக்கான விமானப் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. காபூல் விமான நிலையத்தில் நிலவும் மோசமான நிலையின் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளது.
குப்பைக்கிடங்காக மாறி வரும் காபூல் விமானநிலையம்
தாலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் ஆப்கன் சென்றதிலிருந்து காபூல் விமான நிலையத்தில் குடியேற்ற அலுவலர்கள், பாதுகாப்பு அலுவலர்கள் பணிபுரிவதில்லை. விமான நிலையத்தில் துப்பரவுப் பணியாளர்கள் கூட தங்கள் பணியை மேற்கொள்ளாததால் விமான நிலையம் குப்பைக் கிடங்காகக் காணப்படுவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் இதுவரை ஐந்து விமானத்தின் மூலம் சுமார் ஆயிரத்து ஐநூறு பேரை மீட்டுள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:தேவைப்பட்டால் தாலிபானுடன் இணைந்து செயல்படுவோம் - போரிஸ் ஜான்சன்