தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 29, 2020, 4:16 PM IST

ETV Bharat / international

பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத் தாக்குதல் பின்னணியில் யார்? - பாகிஸ்தான் செய்தியாளர் தகவல்

ஹைதராபாத் : பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் பலூசிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த நபர் ஈடுபட்டிருக்கக் கூடும் என அந்நாட்டு செய்தியாளர் ரமிஷா அலி ஈ டிவி பாரத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Pakistan

பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் ஒன்பது பேர் உயிரிழந்தனர். இன்று காலை பங்குச்சந்தை அலுவலக வளாகத்திற்குள் நான்கு பயங்கரவாதிகள் திடீரென்று நுழைந்து, பணியாளர்கள் மீது கண்டுமூடித்தனமாக சுடத் தொடங்கியுள்ளனர்.

பயங்கரவாதிகள் நுழைந்தவுடன் அதை அறிந்து தயார் நிலையில் இருந்த காவலர்கள் நடத்திய பதில் தாக்குதலில், நான்கு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்தி ஆசிரியர் நிஷாந்த் சர்மா, பாகிஸ்தான் செய்தியாளர் ரமிஷா அலியிடம் பேசிய போது, ”பாகிஸ்தான் பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குனர் பரூக் கான் தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாகத் தெரிவித்தார். இன்று காலை பத்து மணியளவில் எதிர்பாரவிதமாக இந்தத் தாக்குதல் நடைபெற்றது. இதன் பின்னணியில் யார் இருப்பார்கள் என இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

பாகிஸ்தான் செய்தியாளர் ரமிஷா அலி பேட்டி

இருப்பினும் பலூசிஸ்தான் விடுதலை இயக்கத்தின் பிரிவினர் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது பெயரில் தொடங்கப்பட்ட புதிய ட்விட்டர் கணக்கும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகத் தோன்றுகிறது. இருப்பினும் உறுதியான தகவல்கள் ஏதும் இதுவரை தெரிய வரவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'தலிபான், ரஷ்யா இடையே ரகசிய ஒப்பந்தம்'- பரபரப்பை கிளப்பிய அமெரிக்க பத்திரிகை!

ABOUT THE AUTHOR

...view details