தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கராச்சி பங்குச்சந்தையில் பயங்கரவாதத் தாக்குதல் - பயங்கரவாதத் தாக்குதல்

பாகிஸ்தானின் கராச்சி பங்குச்சந்தையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

pakistan-stock-exchange-comes-under-grenade-attack-9-killed
pakistan-stock-exchange-comes-under-grenade-attack-9-killed

By

Published : Jun 29, 2020, 3:25 PM IST

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை எறிந்து தாக்குதல் நடத்தினர். வாகன நிறுத்துமிடம் வழியாக உள்நுழைந்து நான்கு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில், ''தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கையெறி குண்டுகளை அலுவலகத்தின் நுழைவுவாயியில் வீசிவிட்டு உள்ளே வந்துள்ளனர்.அதில் ஒரு காவலர், பாதுகாப்பு அலுவலர்கள் ஆகியோர் காயமடைந்தனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைப் பற்றி சம்பவ இடத்திலிருந்து காவலர் ரிஸ்வான் அகமத் கூறுகையில், ''பங்குச்சந்தையின் நுழைவு வாயிலில் திடீரென துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். அதில் எத்தனை பேர் ஈடுபட்டனர் என்பது பற்றி தெரியவில்லை'' என்றார்.

இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் அனைவரும் அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது பங்குச்சந்தை அலுவலகத்தைப் பாகிஸ்தான் பாதுகாப்புப்படையினர் சுற்றி வளைத்துள்ளனர். இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கராச்சி பங்குச்சந்தையில் பயங்கரவாதத் தாக்குதல்

ABOUT THE AUTHOR

...view details