உலக நாடுகளை அச்சுறுத்தும் கரோனா பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவிவருகிறது. தற்போதுவரை பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72 ஆயிரத்தை எட்டியுள்ளது.
தேசிய சுகாதார சேவை அமைச்சகத்தின் தகவல்களின்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 72 ஆயிரத்து 460 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாயிரத்து 964 பேருக்கு புதியதாக கரோனா உறுதிசெய்யப்பட்டது.