கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதத்தில் பாகிஸ்தானில் பள்ளிகள் மூடப்பட்டன. கரோனாவால் ஏற்பட்ட இறப்புகள், தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான சரிவுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் 6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளிகள்! - பாகிஸ்தானில் ஆறு மாதங்களுக்கு திறக்கப்பட்ட பள்ளிகள்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.
பாதுகாப்பாக குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக பிரதமர் இம்ரான் கான் மற்றும் கல்வி அலுவலர்கள் கூறியுள்ளனர். இஸ்லாமாபாத்தில் உள்ள பள்ளி ஆசிரியரான சனா முபாசர், அனைத்து மாணவர்களும் கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற முக்கியவத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ஆனால், சில பெற்றோர் வைரஸின் இரண்டாவது அலை குறித்து கவலை தெரிவித்தனர். சில பெற்றோர், பள்ளிகள் மிக விரைவாக திறக்கப்படுகின்றன எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.