தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

1,800 பயங்கரவாதிகளை கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்கிய பாகிஸ்தான் - எஃப்.ஏ.டி.எஃப். அமைப்பு பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி உள்ளிட்ட 1,800 பயங்கரவாதிகளின் பெயர்களை கண்காணிப்பு பட்டியலில் இருந்து பாகிஸ்தான் அரசு நீக்கியுள்ளது.

ImranImran
Imran

By

Published : Apr 21, 2020, 3:31 PM IST

சர்வதேச அளவில் பயங்கரவாத செயல்பாடுகளை தடுக்க கண்காணிக்கும் அமைப்புகளில் ஒன்றான எஃப்.ஏ.டி.எஃப். அண்மையில் பாகிஸ்தான் அரசின் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்தது. அதில் பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகளுக்கு சாதகமாக மேற்கொண்ட நடவடிக்கை கண்டறியப்பட்டடுள்ளது.

2018ஆம் ஆண்டு அந்நாட்டில் பதுங்கி கண்காணிக்கப்பட்டுவரும் பயங்கரவாதிகள் எண்ணிக்கை சுமார் 7 ஆயிரத்துக்கும் மேலாக கணக்கிடப்பட்டிருந்தது. அந்த எண்ணிக்கையில் உள்ள 1,800 பேரை நீக்கி தற்போது எண்ணிக்கை குறைவான பட்டியலை அந்நாடு வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இருந்த 2008ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய மூளையாகக் கருதப்படும் சகிர் அல் ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய நபர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தான் அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எஃப்.ஏ.டி.எஃப். விரைவில் உரிய நடவடிக்கையை மேற்கொள்வோம் எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:கரோனா அச்சுறுத்தல்: இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details