நரோவல் மாவட்டம் கர்தார்பூரிலுள்ள நான்கானா சாஹிப் குருத்வாராவுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வர். இந்தாண்டு குருநானக்கின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பல சீக்கியர்கள் கர்தார்பூர் செல்லவுள்ளனர்.
இந்நிலையில், நரோவல் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் முகாம்கள் உள்ளதாகவும் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அப்பகுதியில் அதிகரித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஆனால், இந்தத் தகவல்களைப் பாகிஸ்தான் முற்றிலும் மறுத்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உளவுத் துறை கருத்துகள் என்று இந்திய ஊடகங்கள் வெளியிட்டுவரும் கருத்துகளுக்குப் பாகிஸ்தான் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறது. இந்திய ஊடகங்களின் தகவல்களில் துளியும் உண்மை இல்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.