தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை கரோனா காலி செய்துவிடும்' - இம்ரான் கான் - கரோனா வைரஸ் உலக நாடுகள்

இஸ்லாமாபாத்: உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதித்துவிடும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.

இம்ரான்
இம்ரான்

By

Published : Mar 17, 2020, 9:24 PM IST

பாகிஸ்தானில் கடந்த மூன்று நாள்களாக கரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. அந்நாட்டில் இதுவரை கரோனா வைரஸால் 194 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சீனா, இத்தாலிக்கு அடுத்தப்படியாக மத்தியக் கிழக்கு நாடான ஈரான் கரோனாவால் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. ஈரான் நாட்டின் அண்டை நாடான பாகிஸ்தான், இந்நோய் பாதிப்பால் மேலும் அவதிப்படக்கூடிய அபாயத்தில் உள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தற்போது கருத்து வெளிப்படுத்தியுள்ளார்.

உலக நாடுகளை அச்சுறுத்தும் இந்த கரோனா வைரஸால் வளரும் நாடுகள் கடும் பாதிப்பைச் சந்திக்க உள்ளன எனவும், முன்னேறிய நாடுகள் இதற்குத் தீர்வுகானும் வகையில் வளரும் நாடுகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈரான் தற்போது கரோனாவால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளதால் அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா விலக்கிக்கொள்ள வேண்டும் எனவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

வளைகுடா நாடுகள், மத்தியக் கிழக்கு நாடுகளுக்குத் தொடர்ச்சியாக பாகிஸ்தானியர்கள் பயணம் செய்யவாதால் அந்நாட்டில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அமெரிக்காவில் கரோனா வைரஸ் தடுப்பூசி சோதனை!

ABOUT THE AUTHOR

...view details