இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை அந்நாட்டில் 3,48,184 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, கரோனா பாதிப்புகள் தொடர்பாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தேசிய ஒருங்கிணைப்பு கமிட்டியுடன் நேற்று (நவ.16) ஆலோசனை நடத்தினார்.
அதன் பின் பேசிய அவர், "உலக அளவில் கரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில், 2ஆம் அலை தொடங்கிவிட்டது. இதனால் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த தடைவிதிக்கப்படுகிறது" என்று அறிவித்தார்.