அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் உட்பட பல்வேறு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஒசாமா பின் லேடன். உலக நாடுகளை அச்சுறுத்திவந்த பயங்கராவதி ஒசாமா பின் லேடனின் இருப்பிடத்தை கண்டுபிடித்த அமெரிக்கா அரசு, பாகிஸ்தானுக்குள் நுழைந்து அவரை தாக்கி கொன்றது.
'ஒசாமா பின்லேடன் ஒரு தியாகி' - பாகிஸ்தான் பிரதமர் பேச்சால் சர்ச்சை! - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
கராச்சி: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாராளுமன்றத்தில் பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை தியாகி என புகழாரம் சூட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
imran
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் பல உயிர்களை தியாகம் செய்துள்ளது. இருந்தும் உலக நாடுகளின் பார்வையில் பாகிஸ்தான் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது. அல் கொய்தா தீவிரவாத அமைப்பு தலைவரான ஒசாமா பின்லேடன் ஒரு ஷாகீத் ( தியாகி) என்றார். இவரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.