பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு ரத்த தட்டணுக்கள் குறைபாடு உள்ளது. இதனால் அவர் கடந்த மாதம் (அக்டோபர்) 22ஆம் தேதி, லாகூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்துவருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவரது குடும்ப மருத்துவர்களும் இத்தகவலை தெரிவித்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஜாவேத் அப்பாஸி இதுகுறித்து மேலவையில் கேள்வி எழுப்பினார்.
அவர் தனது அறிக்கையில், ‘பிரதமர் பதவியை மூன்று முறை வகித்த ஒரே நபர் ஷெரீப். அவரது உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் இருப்பதால் அவரை மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்புமாறு பஞ்சாப் அரசின் மருத்துவ வாரியம் பரிந்துரை செய்துள்ளது’ என குறிப்பிட்டிருந்தார்.