பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருள்களின் விலையை உயர்த்தி பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது. அந்நாட்டின் நிதியமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பெட்ரோல் விலையை ரூ.8.03, டீசல் விலையை ரூ.8.14 உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், கெரோசின் விலையை ரூ.6.27, மிதமான டீசல் விலையை ரூ.5.72 உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.
இம்ரான் கானின் இந்த முடிவுக்கு அந்நாட்டில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அந்நாட்டின் தெரிக்-இ-லப்பைக் என்ற அமைப்பு பெரும் போராட்டத்தை நடத்தியதன் காரணமாக கடந்த வாரம் பாகிஸ்தானில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.