தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பாகிஸ்தான் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை: பயங்கரவாத கண்காணிப்பு ஆணையம் - Financial Action Task Force

பயங்கரவாதத்தைத் தடுக்க பாகிஸ்தான் போதுமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது என்று பயங்கரவாத கண்காணிப்பு அமைப்பான சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

Pakistan

By

Published : Oct 7, 2019, 10:27 PM IST

Latest International News பாகிஸ்தான் அரசானது ஹபீஸ் சயீத் உள்ளிட்ட ஐநா சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவித்தவர்களுக்கும், ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கும் எதிராக போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு (Financial Action Task Force) தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு "க்ரே லிஸ்ட்" (Grey List) எனப்படும் கண்காணிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்த அமைப்பு பாகிஸ்தானைச் சேர்த்தது. அதன்படி பயங்கரவாதத்தைத் தடுக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் 40 பரிந்துரைகளை வழங்கியிருந்தது.

இதுவரை பாகிஸ்தான் அதில் ஒன்றை மட்டுமே முழுமையாக நிறைவேற்றியுள்ளது. மேலும் ஒன்பது பரிந்துரைகளைப் பெரும் பகுதியும், 26 பரிந்துரைகளைப் குறைந்த அளவும் நிறைவேற்றியுள்ளது. நான்கு பரிந்துரைகளைக் கொஞ்சம் கூட நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அடுத்த வாரம் (அக்டோபர் 13-18) பாரீஸில் நடைபெறவுள்ள சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு கூட்டத்தில் பாகிஸ்தான் மீண்டும் க்ரே லிஸ்ட்டில் தொடரலாம் அல்லது ஈரான், வடகொரியா நாடுகளைப் போல முற்றிலுமாக தடைசெய்யப்படலாம் (Blacklist) என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: சீனா செல்கிறார் இம்ரான் கான்!

ABOUT THE AUTHOR

...view details