தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்தியாவுக்கு வழிவிட்ட பாகிஸ்தான்! - சர்வதேச நீதிமன்ற செய்திகள்

இஸ்லாமாபாத்: உளவு மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் அரசால் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவை  இந்திய தூதரக அலுவலர்கள் சந்திக்க பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது.

#KulbhushanJadhav

By

Published : Sep 2, 2019, 11:47 AM IST

ஈரான் வழியாக பாகிஸ்தான் நாட்டிற்குள் நுழைந்து அந்நாட்டு விவகாரங்களை உளவு பார்த்ததாக இந்திய கடற்படை வீரர் குல்பூஷன் ஜாதவிற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனையை மறுபரிசீலனை செய்யக்கோரியும், குஷ்பூஷளை சந்திக்க அனுமதி வழங்கக்கோரியும் சர்வதேச நீதிமன்றத்தை இந்திய அரசு நாடியது.

இந்திய அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சர்வதேச நீதிமன்றம், ஜாதாவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்தும், தண்டனையை பாகிஸ்தான் பரிசீலிக்கவும் உத்தரவிட்டது. மேலும், ஜாதவை இந்திய தூதரக அலுவலர்கள் சந்திக்கவும் அனுமதியளிக்க அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் அரசு தற்போது இந்திய தூதரக அலுவலர்கள் ஜாதாவை சந்திக்க அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, இந்திய பொறுப்பு விவகாரங்கள் துறையைச் சேர்ந்த கவுரவ் அலுவாலியா குல்பூஷண் ஜாதவை சந்திக்கவுள்ளார்.

சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவிற்கேற்ப இந்த சந்திப்பு வெளிப்படையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் வகையிலான சூழலை பாகிஸ்தான் உறுதி செய்யும் என நம்பிக்கை கொண்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details