உலகளவில் கரோனா வைரஸ் தாக்கம் உச்சத்தில் உள்ளது. தினந்தோறும் லட்சக்கணக்கானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். பலர் கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, பல நாடுகளின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கரோனா தொற்று! - ஷா மெஹ்மூத் குரேஷி கொரோனா தொற்றால் பாதிப்பு
கராச்சி: பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷிக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது
அந்த வகையில், பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷிக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. தற்போது, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கனவே, பாகிஸ்தானில் தகவல் தொழில்நுட்ப மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் சையது அமீனுல், முன்னாள் பிரதமர்கள் யூசுஃப் கிலானி, ஷாஹித் அப்பாசி, பாகிஸ்தான் முஸ்லீம் கட்சியின் தலைவர் ஷாபால் ஷெரீஃப் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இதுவரை அந்நாட்டில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.