காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இந்த விவகாரம் உலக நாடுகளிடையே பெரும் விவாதப்பொருளாக மாறிய நிலையில், பல்வேறு நாடுகள் இந்திய அரசுக்கு ஆதரவு அளித்த நிலையில், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வந்த நிலையில் பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தி வந்தது. இந்திய பாதுகாப்பு படையும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இது தொடர்பாக தற்போது பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பவாத் உசேன் ட்வீட் செய்துள்ளார்.
அதில், காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை தடை செய்த இந்திய அரசை கண்டித்து பாகிஸ்தான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்த விவகாரத்தை முன்வைத்த நிலையில், சீனாவை தவிர வேறு யாரும் பாகிஸ்தானுக்கு துணை நிற்க வில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான், ஆப்கன் உள்ளிட்ட நாடுகளில் இந்தியா வர்த்தகம் செய்ய பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தி வரும் நிலையில் இதற்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்திருப்பதாக அந்நாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பவாத் உசேன் அறிவித்துள்ளார். பாகிஸ்தானின் இந்த பிடிவாத செயல் தொடர்ந்து மத்திய அரசை கோபத்திற்குள்ளாக்கி வருகிறது.