2001-2008ஆம் காலகட்டத்தில் பாகிஸ்தான் அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரஃப், சர்வாதிகார நோக்கோடு 2007ஆம் ஆண்டு அந்நாட்டில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி அதிகார அத்துமீறலில் ஈடுபட்டார்.
இதையடுத்து, முசாரஃப் மீது 2013ஆம் ஆண்டு தேசத்துரோக வழக்குப் பதியப்பட்டது. தொடர்ந்து 2014 மார்ச் 31ஆம் தேதி இந்த வழக்குத் தொடர்பாக குற்றப்பத்திரிகை பதியப்பட்டு அதே ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணைக்காகச் சிறப்பு நீதிமன்றம் முன் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆனால், முசாரஃப் மேற்கொண்ட மேல்முறையீட்டு மனுக்களால் இந்த வழக்கு விசாரணையில் இழுபறி நீடித்துவந்தது. இதனிடையே, 2016 மார்ச் மாதம் சிகிச்சைக்காக துபாய்க்கு சென்ற முசாரஃப்பை, சிறப்பு நீதிமன்றம் பலமுறை ஆஜராகக்கூறியும் பாகிஸ்தானுக்கு திரும்பிவராததால் அவர் தலைமறைவாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பெஷாவர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வாகர் அகமது சேத் தலைமையில் நடைபெற்றுவந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பர்வேஸ் முஷாரஃபுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதையும் படிங்க : எலி குட்டிகள் சண்டையிடும் அபூர்வ காட்சி; மனதை வென்ற க்யூட் புகைப்படம்!