கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்து வரும் நிலையில், பாகிஸ்தானில் 74ஆவது சுதந்திர தினம் இன்று (ஆக. 14) கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 31 குண்டுகள் முழங்க தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடையே உரையாடிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினார்.
காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அரசியலாக்கும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வி அடைந்துள்ள நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து இம்ரான் கான் தற்போது பேசியுள்ளார். காஷ்மீருடன் துணை நிற்கும் நாளும் இன்று பாகிஸ்தானில் கொண்டாடப்பட்டது. ஆனால், அதற்கு பெரும் ஆதரவு கிடைக்கவில்லை.