பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து தொலைபேசியில் பேசினர்.
யுஏஇ இளவரசருடன் தொலைபேசியில் உரையாடிய பாகிஸ்தான் பிரதமர் - ஐக்கிய அரபு இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்
இஸ்லாமபாத்: ஐக்கிய அரபு இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்வுடன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இருநாட்டு உறவை வலுப்படுத்தல் தொடர்பாக தொலைபேசியில் கலந்துரையாடினார்.
![யுஏஇ இளவரசருடன் தொலைபேசியில் உரையாடிய பாகிஸ்தான் பிரதமர் பிரதமர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10534205-61-10534205-1612691605390.jpg)
இதுகுறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இரு தலைவர்களும் பாகிஸ்தானுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையில் தற்போதுள்ள நெருக்கமான உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியதோடு, இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்தவது தொடர்பாக கலந்துரையாடினார்கள். மேலும், கோவிட் -19 தொற்றுநோய் காலக்கட்டம் தொடர்பாகவும், பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
கிடைத்த தகவலின்படி, 2019இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாகிஸ்தானுக்கு 2 பில்லியன் டாலர் அந்நிய செலாவணிகளை வலுப்படுத்துவதற்காக வழங்க முடிவு செய்தது. அதில், மீதமுள்ள 1 பில்லியன் டாலர் வரும் மார்ச் மாதத்தில் அளிக்கப்படவுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் பிரதமர் தொலைபேசி அழைப்பு செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.