தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இஸ்லாமியர்களை பாதிக்காதவாறு இந்தியாவில் அணுகுண்டுகளை வீசுவோம் - பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சை பேச்சு - அணு ஆயுதப் போர்

இஸ்லாமாபாத்: இஸ்லாமியர்களை பாதிக்காதவாறு இந்தியாவில் சில பகுதிகளில் அணுகுண்டுகளை வீசுவோம் என பாகிஸ்தான் அமைச்சர் ரஷித் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்

By

Published : Aug 21, 2020, 3:23 PM IST

இந்தியாவுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷித் தொடர் கருத்துகளை தெரிவித்துவருகிறார். இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுத போர் தொடுக்கப்படும் எனவும், இஸ்லாமியர்களை பாதிக்காதவாறு அந்த தாக்குதல் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "சிறியதாக இருந்தாலும் சிறப்பான அணு ஆயுதங்கள் பாகிஸ்தானிடம் உள்ளது. சில பகுதிகளில் மட்டுமே அணு குண்டுகள் வீசப்படும். தாக்குதல் நடத்த அசாமையும் தற்போது தேர்ந்தெடுத்துள்ளோம். இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், எங்களுக்கு வேறு வழியில்லை.

அணு ஆயுதப் போர் தொடுக்கப்படும். அதுவே இறுதியானது. இஸ்லாமியர்களை பாதிக்காதவாறு ஒரு சில பகுதிகளில் மட்டுமே தாக்குதல் மேற்கொள்ளப்படும்" என தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதப் போர் தொடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பல முறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:குல்பூஷன் ஜாதவ் சார்பாக இந்திய வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் - வெளியுறவுத்துறை அமைச்சகம்

ABOUT THE AUTHOR

...view details