தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கில்ஜித் - பல்ஜிஸ்தானில் காபந்து அரசு நியமனம் - இந்தியா கில்ஜித் - பல்ஜிஸ்தான் பகுதி

இஸ்லாமாபாத் (பாகிஸ்தான்): இருநாட்டு எல்லையின் சர்ச்சைக்குரியப் பகுதியில் கில்ஜித் - பல்ஜிஸ்தான் காபந்து அரசை நியமித்து பாகிஸ்தான் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Pakistan
Pakistan

By

Published : May 18, 2020, 1:01 PM IST

Updated : May 18, 2020, 2:53 PM IST

ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்குப்பின் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் தொடர்ச்சியாக நிலவி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும், என இந்தியத் தரப்பில் உறுதியாகப் பேசப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பகுதியாகக் கருதப்படும் கில்ஜித் - பல்ஜிஸ்தான் பகுதியை குறிவைத்து இந்தியா காய்களை நகர்த்தி வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம், வடக்குப் பகுதிகளில் வானிலை அறிவிப்பை வெளியிடும்போது கில்ஜித் - பல்ஜிஸ்தான் பகுதி குறித்தும் அறிவிப்புகள் வெளியிட மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த நகர்வு பாகிஸ்தானை வெகுவாகச் சீண்டியதையடுத்து, தற்போது பாகிஸ்தான் தன் பங்கிற்கு முக்கிய நகர்வை மேற்கொண்டுள்ளது. கில்ஜித் - பல்ஜிஸ்தான் பகுதியில் தற்காலிக தன்னாட்சி அமைப்பை உருவாக்கும் விதமாக, காபந்து அரசு ஒன்றை பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்வி அறிவித்துள்ளார்.

இதையடுத்து, அங்கு விரைவில் தேர்தல் நடத்தவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க:முற்றும் ஒபாமா - ட்ரம்ப் வார்த்தைப் போர்!

Last Updated : May 18, 2020, 2:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details