தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவோரை பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும்' - இம்ரான் கான் ஆவேசம் - பாலியல் குற்றம் தூக்குத் தண்டனை இம்ரான் கான்

பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட குற்றத்தில் ஈடுபடுவோரை பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.

Imran Khan
Imran Khan

By

Published : Sep 15, 2020, 10:16 PM IST

பாகிஸ்தானில் அன்மையில் நடைபெற்ற பாலியல் குற்றம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அங்குள்ள பெண் ஒருவரை அவரது குழந்தைகள் முன்னரே இருவர் பாலியல் வன்புணர்வு செய்தனர். இந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கருத்தை தெரிவித்துள்ளார். அதில், நாட்டில் பாலியல் குற்றச் செயல்கள் தற்போது வேகமாக அதிகரித்து வருகின்றன எனவும் மேற்கண்ட கோரச் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.

இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை பொதுவெளியில் வைத்து தூக்கிலிட வேண்டும் என்பதே தனது கருத்து என்று கூறிய இம்ரான் கான், இது போன்ற தண்டனைகளை சர்வதேச சமூகம் ஏற்காது என்பதால் நடைமுறைபடுத்த இயவில்லை என்றார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சட்டம் ஒழுங்கை கவனிக்க தவறியதாக குற்றச்சாட்டை முன் வைக்கும் அந்நாட்டு மக்கள், இந்த குற்றச்செயலில் ஈடுபட்டோரை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:'ஹாங்காங் சென்றால் கைதுசெய்யப்படலாம்' - எச்சரிக்கும் அமெரிக்கா

ABOUT THE AUTHOR

...view details