பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக இன்று சீனா செல்கிறார். இந்தப் பயணத்தின்போது சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேசுகிறார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையோன உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேசப்படவுள்ளது.
தொழிற்சாலை, சமூகப் பொருளாதாரம், சீன-பாகிஸ்தான் பொருளாதார மண்டலம், விவசாயத்தில் இரு நாடுகளும் இணைந்து பங்களிப்பது தொடர்பாக இருநாட்டுத் தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.
மேலும் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் சீன-பாகிஸ்தான் பொருளாதார மாநாட்டில் இம்ரான் கான் பேசவுள்ளார். ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவளித்துவருகிறது.