இந்தியாவில் கோவிட்-19 இரண்டாம் அலை தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டுவதாகப் பல்வேறு நாடுகள் தெரிவித்துள்ளன.
அண்டை நாடான பாகிஸ்தானும் இந்த இக்கட்டான சூழலில் இந்தியவுடன் துணை நிற்பதாகத் தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவிட்-19 இரண்டாம் அலை காரணமாக இந்திய மக்கள் பாதிக்கப்பட்டுவரும் சூழலில் பாகிஸ்தான் அவர்களுடன் துணை நிற்கிறது.
அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவி, வென்டிலேட்டர்கள், பிபிஇ உபகரணங்கள், பரிசோதனை கருவிகளை வழங்க பாகிஸ்தான் தயாராகவுள்ளது. நாங்கள் மனிதத் தன்மையை முதன்மையாகக் கருதுகிறோம்" என்றார்.
இதையும் படிங்க:'இந்தியாவுக்கு உதவுங்கள்' - ஜோ பைடனுக்கு அழுத்தமளிக்கும் அமெரிக்கர்கள்!