தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்தியாவுக்குப் பாக். அனுமதி - consular acces

டெல்லி: தங்கள் நாட்டு சிறையிலுள்ள குல்பூஷன் ஜாதவை இந்திய தூதர்கள் சந்திக்க பாகிஸ்தான் அரசு அனுமதியளித்துள்ளது.

குல்பூஷன் ஜாதவ்

By

Published : Aug 2, 2019, 12:13 PM IST

இந்தியாவின் முன்னாள் கடற்படை அலுவலரான குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தான் பகுதியில் உளவு பார்த்ததாகக் கூறி 2013ஆம் ஆண்டு அந்நாட்டு அரசு அவரை கைது செய்தது. ஆனால் இதனை முற்றிலுமாக மறுத்துவரும் இந்தியா, குல்பூஷன் ஜாதவை ஈரானிலிருந்து பாகிஸ்தான் கடத்தியுள்ளதாகக் குற்றம்சாட்டியது.

இந்நிலையில் பாகிஸ்தான் அரசு குல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையைச் சர்வதேச நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்து, பாகிஸ்தான் அளித்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது.

தற்போது குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அலுவலர்களுக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தத் தகவலை மத்திய அரசு நேற்று உறுதி செய்துள்ளது.

குல்பூஷனை இந்திய தூதரக அலுவலர்கள் சந்திக்கும்போது பாகிஸ்தானைச் சேர்ந்த அலுவலர் ஒருவரும் இருப்பார் உள்ளிட்ட சில நிபந்தனைகளை பாகிஸ்தான் விதித்துள்ளதாகவும் அதை இந்தியா பரிசீலித்துவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, இன்று மாலை 3 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details