தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

‘பயங்கரவாதத்தின் மையம் பாகிஸ்தான்’ - ஆராயச் சொல்கிறது இந்தியா - தீவிரவாதிகளின் வன்முறை

தனக்கு எதிராக பரப்பப்படும் அவதூறு கருத்துகளை விமர்சனம் செய்த இந்தியா, பயங்கரவாதத்தின் மையம் என பாகிஸ்தான் அழைக்கப்படுவதற்கான காரணத்தை அந்நாடு ஆராய வேண்டும் என தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்

By

Published : Jul 8, 2020, 4:35 PM IST

கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. ஒரு பக்கம் பெருந்தொற்று உலகை ஆட்டிப் படைக்கும் நிலையில், மறு பக்கம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திவருகின்றனர். குறிப்பாக, காஷ்மீரில் கடந்த மூன்று மாதங்களாக தாக்குதல் சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், ”உலகை அச்சுறுத்தும் பயங்கரவாதம்: அபாய மிரட்டல்கள் மற்றும் போக்குகளின் மதிப்பீடு, அதிகரிக்கும் தீவிரவாதிகளின் வன்முறை, பெருந்தொற்று காலத்தில் வெறுப்பை பரப்பும் பேச்சுகள்” என்ற தலைப்பில் வீடியோ கான்பரன்சிங் மூலம் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்தியா சார்பில் கலந்துகொண்ட மஹவீர் சிங்வி, பயங்கரவாதத்தின் மையம் என பாகிஸ்தான் அழைக்கப்படுவதற்கான காரணத்தை அந்நாடு ஆராய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "பெருந்தொற்றுக்கு எதிராக உலகம் போரிட்டு வருகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக பாகிஸ்தான் இதனை வாய்ப்பாக பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக பொய்யான தவறான அவதூறு கருத்துகளை பரப்பிவருகிறது. அதுமட்டுமில்லாமல், உள்நாட்டு பிரச்னைகளில் அது தலையிடுகிறது.

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டுக்கு கீழ் அந்நாட்டில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதத்தின் மையம், தீவிரவாதிகளின் சொர்க்கம் என பாகிஸ்தான் அழைக்கப்படுவதற்கான காரணத்தை அந்நாடு ஆராய வேண்டும். அகமதியர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் ஆகிய சிறுபான்மையினர்களுக்கு எதிராக பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்படுகிறது" என்றார்.

இதையும் படிங்க: அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது - வடகொரியா

ABOUT THE AUTHOR

...view details