தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

குரு நானக் பிறந்தநாளைக் கொண்டாட சீக்கியர்களுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான்

வரும் நவம்பர் 27ஆம் தேதி குரு நானக்கின் 551ஆவது பிறந்தநாளைக் கொண்டாட இந்தியாவில் உள்ள சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

Pakistan
Pakistan

By

Published : Oct 19, 2020, 3:09 PM IST

சீக்கிய மதத்தின் நிறுவனரும், சீக்கியர்களின் முதன்மை குருவாகக் கருதப்படும் குரு நானக்கின் 551ஆவது பிறந்தநாள் விழா வரும் நவம்பர் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பஞ்சாப் எல்லையானது இந்தியா-பாகிஸ்தான் நாடுகளை இணைக்கும் இடத்தில் உள்ளதால், சீக்கியர்களின் பல புனிதத் தலங்கள் பாகிஸ்தானிலும் உள்ளன.

இந்தப் பிறந்தநாள் விழா பாகிஸ்தனின் நன்கானா சாஹிப் என்ற இடத்தில் மூன்று நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த விழாவில் இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் பங்கேற்க பாகிஸ்தான் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது கோவிட்-19 காலம் என்பதால், வழிகாட்டு நெறிமுறைகளின் படி வருகை தருபவர்கள் கட்டாய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தத்தின்படி, சுமார் மூவாயிரம் சீக்கியர்கள் குருத்வாரா விழாவில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு நாட்டு உறவை இது போன்ற சமய, சமூக விழாக்கள் மூலம் மீட்டெடுக்க பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டுவருகிறது.

இதையும் படிங்க:பப்ஜிக்கு நோ சொன்ன தந்தை, கழுத்தில் கத்தியால் கோடு போட்ட மகன்!

ABOUT THE AUTHOR

...view details