சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ் பாகிஸ்தானில் வசித்துவந்ததன் நினைவாக, சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள ராவி நதிக்கரையில் கர்தார்பூர் சாஹிப் என்ற குருத்துவாரா அமைக்கப்பட்டுள்ளது. இந்த குருத்வாராவுக்கு சீக்கியர்கள் வருடந்தோறும் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இங்கு சீக்கியர்கள் எளிதாக சென்றுவர பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தேரா பாபா நானக் நகரிலிருந்து, இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் சிறப்பு வழித்தடம் அமைத்திட மத்திய அரசு முடிவுசெய்தது. இதற்கு பாகிஸ்தான் அரசும் ஒப்புதம் அளிக்கவே, வழித்தட பணிகள் தொடங்கி சமீபத்தில் முடிவுற்றன.