தமிழ்நாடு

tamil nadu

இந்தியாவுடன் கைகோர்க்கும் பாகிஸ்தான்!

By

Published : Mar 13, 2020, 10:17 PM IST

இஸ்லாமாபாத்: கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அண்டை நாடுகளுடன் இணைந்து செயல்பட தயார் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

Coronavirus outbreak
Coronavirus outbreak

சீனாவில் பரவத் தொடங்கிய கோவிட் 19 (கொரோனா) வைரஸ் தொற்று, தற்போது பல்வேறு நாடுகளுக்கும் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவிலும் கோவிட் 19 வைரஸ் தொற்றின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இந்தியாவில் இதுவரை 75 பேர் கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, பாகிஸ்தானிலும் 20 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக சுகாராத அமைப்பு கோவிட்-19 வைரஸை பேரழிவை ஏற்படுத்தும் தொற்றாக (Pandemic) அறிவித்துள்ளது. மேலும், இந்த வைரஸ் மிக வேகமாக பரவும் என்றும் இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் உலக சுகாராத அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், இஸ்லாமபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் ஆயிஷா பாரூக்கி, "தற்போது இங்கு நிலவிவரும் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்துவருகிறோம். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன.

இது குறித்து அண்டை நாடுகளுடன் இணைந்து செயல்படவும் தயாராகவுள்ளோம். வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த, பாகிஸ்தானிலுள்ள விமான நிலையங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன" என்றார்.

இதையும் படிங்க: கொரோனா தொற்று - அமெரிக்க - சீனா நாடுகளுக்கிடையே முற்றிய பிரச்னை

ABOUT THE AUTHOR

...view details