பாகிஸ்தான் ராணுவ தளபதியாக 1998ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் பர்வேஸ் முஷாரப். 2001ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டு வந்து அந்நாட்டின் அதிபராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, 2007ஆம் ஆண்டு அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதனால், அங்கு போராட்டங்கள் வெடித்தன.
பதவி பறிக்கப்படுவதற்கு முன்பே 2008ஆம் ஆண்டு தனது அதிபர் பதவியை முஷாரப் ராஜினாமா செய்தார். அந்நாட்டின் பிரதமராக நவாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், முஷாரப்புக்கு எதிராக அவர் தேச துரோக வழக்கு தொடுத்தார். அரசியல் காரணங்களுக்காக தேச துரோக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக முஷாரப் தெரிவித்திருந்தார்.