தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சீனாவுடன் உறவை வலுப்படுத்தும் பாகிஸ்தான் - ஆசியாவில் அரசியல் மாறுமா? - சீனா - பாகிஸ்தான் இருநாட்டு வெளியுறவு செயல் உத்தி குறித்த முக்கிய உரையாடல்

இஸ்லாமாபாத் : சீனா - பாகிஸ்தான் இருநாட்டு வெளியுறவு செயல் உத்தி குறித்த முக்கிய உரையாடலில் பங்கேற்க பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

சீனாவுடன் உறவை வலுப்படுத்தும் பாகிஸ்தான் - ஆசியாவில் அரசியல் மாறுமா?
சீனாவுடன் உறவை வலுப்படுத்தும் பாகிஸ்தான் - ஆசியாவில் அரசியல் மாறுமா?

By

Published : Aug 20, 2020, 8:54 PM IST

இரண்டாம் கட்டமாக நடைபெறும் சீனா - பாகிஸ்தான் இடையேயான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ள அவர், இந்த சீன பயணம் மிக முக்கியமான ஒன்றென காணொலி பதிவில் கூறியுள்ளார். பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக, பிரதமர் இம்ரான் கானுடன் அவர் கலந்துரையாடியதாக அறிய முடிகிறது.

இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள குறிப்பில், " சீனா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களின் உரையாடலின் முதல் சுற்று, கடந்த 2019 மார்ச் மாதம் நடந்தது. அதனின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள பாகிஸ்தான் வெளியுறவுத் துறை உயர் அலுவலர்கள் அடங்கிய தூதுக் குழுவொன்று நாட்டின் அரசியல் மற்றும் ராணுவத் தலைமையின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்த அமைச்சர் குரேஷி தலைமையில் பங்கேற்கும்.

வெளியுறவு மந்திரி வாங் யி உடனான எனது சந்திப்பு இரு நாடுகளுக்கும் பயன் அளிக்கும் என்பதை நிரூபிக்கும் என்று அரசு நம்புகிறது. சீனாவின் ஹைனான் மாகாணத்தில் நடைபெறும் இந்த உரையாடலில் சீனாவின் குழுவை செஞ்சீன அரசின் கவுன்சிலரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யி சீனத் தரப்பை வழிநடத்துவார்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த உரையாடலின் போது, ​​இரு தரப்பினரும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது, பரஸ்பர ஒத்துழைப்பை நல்குவது, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதிப்பார்கள்" என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்-பெய்ஜிங்கின் கூட்டுறவு ஆசியாவில் பெரும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என, அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details