தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஷாபாஸ் மானநஷ்ட வழக்கு: இம்ரான் கானுக்கு நோட்டீஸ்! - ஷாபாஸ் மானபங்க வழக்கு நவாஸ் ஷரீஃப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக ஷாபாஸ் ஷரிஃப் தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் ஜூன் 10ஆம் தேதிக்குள் அவர் பதிலளிக்க வேண்டும் என பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Imran khan
Imran khan

By

Published : Jun 7, 2020, 5:51 PM IST

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவர் நவாஸ் ஷரிஃபுக்கு எதிரான பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கைத் திரும்பப்பெறக்கோரி அவரது சகோதரர் ஷாபாஸ் ஷரிஃப் தன்னிடம், 460 கோடி ரூபாய் தர வழங்க முன்வந்ததாகப் பாகிஸ்தான் தரீக்-இ-இம்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான் கான் (தற்போதைய பாகிஸ்தான் பிரதமர்) 2017ஆம் ஆண்டு குற்றம்சாட்டியிருந்தார்.

இம்ரான் கானின் இந்தக் கருத்து தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாகக் கூறி, அதற்கு ஈடாக இம்ரான் கான் கூறிய தொகையே தனக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிடுமாறு பாகிஸ்தான் நீதிமன்றத்தில் மானநஷ்ட ஷாபாஸ் ஷரிஃப்வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் இழுபறி நீடித்துவந்த நிலையில், கடந்த மூன்று வருடங்களாக இம்ரான் கான் எந்த ஒரு பதிலையும் அளிக்காமல் வழக்கை இழுத்தடித்து வருவதாகவும், ஜூன் 10ஆம் தேதிக்குள் அவர் பதிலளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சோஹெய்ல் அன்ஜும், வரும் ஜூன் 10ஆம் தேதிக்குள் இம்ரான் கான் எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க : கேரளாவில் யானையோடு பழகும் குழந்தையின் வைரல் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details