பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதியாக குவாமிர் ஜாவித் பாஜ்வா இருந்துவருகிறார். நிதி நெருக்கடியால் பல பாதிப்பை சந்தித்துவரும் பாகிஸ்தானை சீரமைக்க பிரதமர் இம்ரான்கான் தொடர் முயற்சிகளை மேக்கொண்டுவருகிறார். இந்நிலையில், அரசுமுறை பயணமாக அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி லண்டன் சென்றடைந்துள்ளார்.
லண்டன் சென்றடைந்த பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி! - arrives
லண்டன்: அரசுமுறை பயணமாக பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி குவாமிர் ஜாவித் பாஜ்வா லண்டன் சென்றடைந்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி
இது தொடர்பாக, செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள ராணுவத் தலைமைத் தளபதி ஜாவித் பாஜ்வா, அந்நாட்டு அலுவலர்களை சந்தித்துப் பேசுவார். அப்பொழுது. சுற்றுச்சூழல், பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.