தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பெண்கள் செய்யும் தவறுகள் தான் கோவிட்-19 தொற்றுக்கு காரணம் - மதகுரு பேச்சால் சர்ச்சை

எத்சாஸ் டெலிதான் எனும் நிதி திரட்டும் விழா பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடந்தது. இதில் பேசிய மவுலானா தாரிக் ஜமீல் எனும் மதகுரு, பெண்கள் குறித்த தவறான கண்ணோட்டத்தை கொண்ட பதிவை மேடையில் உரைத்தார். ஆனால் பிரதமர் இதனை எதிர்க்கவோ, அவரை பேச வேண்டாம் என தடுக்கவோ, கேள்வியெழுப்பவோ இல்லை என சர்ச்சைக் கிளம்பியுள்ளது.

world news in tamil
world news in tamil

By

Published : Apr 27, 2020, 1:27 PM IST

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் மதகுரு ஒருவர் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை பிரதமர் இம்ரான் கான் முன்னிலையில் தெரிவித்தும், அது குறித்து அவர் கேள்வி எழுப்பாததால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

எத்சாஸ் டெலிதான் எனும் நிதி திரட்டும் விழா பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடந்தது. பல முக்கிய தலைவர்களை ஒன்றிணைத்து நடத்தப்பட்ட இந்த விழாவானது கோவிட்-19 தொற்றிலிருந்து நாட்டை காக்க மக்களிடம் நிதி திரட்டும் பெரும் நிகழ்வாக கருதப்பட்டது..

பள்ளி வளாகத்தில் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த மூவர்!

விழாவில் பிரதமர் முன்னிலையில் பேசிய மவுலானா தாரிக் ஜமீல் எனும் மதகுரு, பெண்கள் செய்யும் தவறுகளால் தான் கோவிட்-19 போன்ற தொற்று வியாதிகள் நாட்டை பற்றிக்கொண்டுள்ளதாக உரைத்தார். இதனை பிரதமர் இம்ரான் கான் தடுத்திருக்க வேண்டும் எனக் கூறும் பெண்கள் அமைப்புகள், அதுகுறித்து எந்த கருத்தும் பிரதமர் கூறாமல் சென்றது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த சர்ச்சை தொடர்பாக செய்தி வெளியிட்ட ஊடகங்களை சாடிய மவுலானா, பின்னர் அதற்காக வருந்துவதாகக் கூறினார். இருப்பினும் இதுவரையில் பெண்கள் குறித்து அவர் கூறிய சர்ச்சைப் பேச்சுக்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

பிரபல செய்தித்தாள் நிறுவனமான டான் தன் தலையங்கத்தில், இது போன்ற அறிக்கைகள் கவலைக்குரியவை, அவை ஒரு உயர் மட்ட மேடையில் இருந்து வெளிவருவது அதிர்ச்சிக்குள்ளான காரியம் என்று கூறியுள்ளது. பெண்களைப் புண்படுத்தும் கருத்துக்களை கூறிய மதகுரு மேடையிலேயே திருத்தப்படவில்லை என்பது ஒரு “அவமானம்” என்று டான் சுட்டிக்காட்டியுள்ளது.

ஊரடங்கில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக 2,963 புகார்கள்!

மேலும் இதுகுறித்து பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையமும் மவுலானாவுக்கு தனது கண்டனங்களை தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details