ஈராக்கில் அதிகரித்துவரும் வேலையின்மை, ஊழல், தவறான நிதி மேலாண்மை உள்ளிட்ட பிரச்னைகளைக் காரணம்காட்டி, அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஒருமாத காலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதில் இதுவரையில் 300 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் ஈராக்கின் மனித உரிமைப் பாதுகாப்புக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உச்சகட்ட குழப்பத்தில் ஈராக்: ஒரே நாளில் 17 பேர் மரணம்
ஈராக் அரசு, அந்நாட்டு மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்தத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் போன்ற பல சர்வதேச மனித உரிமைக் குழுக்கள் எச்சரித்துவருகின்றன.
ஆனால் போராட்டக்காரர்களை ஒடுக்கும் நோக்கத்தில் அரசு அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடத்திவருவதன் காரணமாகத்தான் அதிகளவில் மக்கள் மரணித்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.