சீனாவில் கடந்தாண்டு இறுதியில் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவத்தொடங்கியது. உலகெங்கும் 3,84,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16,591 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக சீனாவில் இந்த வைரஸ் தொற்றால் 3,277 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுதான் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் சீனாவில் படிப்படியாகக் குறைந்துவருகிறது, கடந்த சில நாள்களாகவே இந்த வைரசால் சீனாவில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
இதனால் சீனா இப்போதுதான் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. இந்நிலையில், சீனாவிற்கு அடுத்த தலைவலியை ஏற்படுத்தும் விதமாக ஹன்டா வைரஸ் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு சீனாவிலுள்ள ஷாண்டோங் மாகாணத்தில் வேலைக்குச் சென்ற ஒருவர் திடீரென்று உயிரிழந்தார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு ஹன்டா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் பயணித்த 32 பேருக்கும் வைரஸ் தொற்று தொடர்பாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.