தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

டோக்கியோவில் அவசர நிலை பிரகடனம்: பார்வையாளர்களின்றி நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகள்! - ஒலிம்பிக் டோக்கியோ

ஜப்பான் தலைநகர், டோக்கியோவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, பார்வையாளர்கள் இன்றி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.

ஒலிம்பிக்
ஒலிம்பிக்

By

Published : Jul 10, 2021, 3:33 PM IST

உலகின் 32ஆவது ஒலிம்பிக் போட்டிகள், ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் வரும் 23ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டே நடத்த திட்டமிடப்பட்டிருந்த 32ஆவது ஒலிம்பிக் போட்டிகள், கரோனா பரவல் காரணமாக தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு கரோனா பரவலுக்கு மத்தியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடத்தப்பட உள்ளது.

முன்னதாக, பார்வையாளர்களுடன் பாதுகாப்பாக போட்டிகளை நடத்த போட்டி ஏற்பாடுகளை செய்து வரும் சில நிறுவனங்கள் அனுமதி கோரி வந்தன. இந்நிலையில், தற்போதைய உருமாறிய டெல்டா வைரஸ் பாதிப்புகள் காரணமாக மேலும் சில கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாட்டு பிரதமர் யோஷிஹிடே சுகா அறிவித்துள்ளார்.

அதன்படி, நாளை மறுநாள் (ஜூலை.12) தொடங்கி ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். இதனால் பார்வையாளர்களின்றி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.

புதிய டெல்டா வைரஸின் கரோனா மையமாக டோக்கியோ மாறுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்,

இதையும் படிங்க:ஆப்கானை கட்டமைப்பது அமெரிக்காவின் பொறுப்பல்ல - ஜோ பைடன்

ABOUT THE AUTHOR

...view details