ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு - Tokyo olympic games postponed
18:01 March 24
கரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் நோய் உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. இதையடுத்து, ஜூலை 24ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டுக்கு போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் நோயால் உலகம் முழுவதும் 3,87,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலகுவதாக கனடா ஒலிம்பிக் கமிட்டி மார்ச் 22ஆம் தேதி அறிவித்தது. இம்மாதிரியான சூழல்களில் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க முடியாது என ஆஸ்திரேலியா ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உயர்மட்ட தலைவர்களிடம் போட்டிகளை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்று ஒத்திவைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக சில நாடுகளில் ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.